• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-02-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அம்பாந்தோட்டை, சூரியவெவ தொழினுட்ப பூங்காவில் அனர்த்தத்திலிருந்து இயல்புநிலைக்கு வரும் நிலையத்திற்கான கட்டமொன்றை நிருமாணித்தல்

- கடதாசியின் மீது கையெழுத்தினால் பதிவுசெய்யும் முறைமையையும் கையெழுத்தினால் வழங்கப்படுகின்ற தகவல்களுடனும் ஆளடையாள அட்டைகள் விநியோகிப்பதன் மூலம் பல்வேறுப்பட்ட பிரச்சினைகளையும் கஷ்டங்களையும் குறைத்துக் கொள்ளும் நோக்கில் இலங்கையர்களினது தரவுகளை சேகரித்து இந்தத் தரவுகளை இலக்க முறைப்படுத்தியதன் பின்னர், ஆட்களுக்கான தரவு களஞ்சியமொன்றைத் தாபிப்பதற்கும் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை வழங்குவதற்கும் அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை தொடர்ச்சியாக பேணுவதற்கும் புயல், வௌ்ளம், அல்லது நில நடுக்கம் போன்ற இயற்கை அனர்த்தங்களிலிருந்தும் இணையத்தள துண்டிப்பு போன்ற தொழினுட்ப பிரச்சினைகளிலிருந்தும் பிரதான தரவு மையத்தை பாதுகாக்கும் பொருட்டும் அனர்த்தத்திலிருந்து இயல்புநிலைக்கு வரும் நிலைமொன்றைத் தாபிப்பதற்குத் தேவையாகவுள்ளது. இதற்குகான உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டுள்ள அம்பாந்தோட்டை, சூரியவெவ தொழினுட்ப பூங்காவில் அனர்த்தத்திலிருந்து இயல்புநிலைக்கு வரும் நிலையத்தை தாபிப்பதற்கு பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.