• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-02-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் மாலைதீவு குடியரசுக்கும் இடையே விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடுதல்

- மாலைத்தீவு குடியரசின் அதிமேதகைய சனாதிபதி இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இருநாட்டின் விளையாட்டுத்துறையின் மேம்பாட்டுக்காக மாலைத்தீவு குடியரசின் தேசிய விளையாட்டுத்துறை நிறுவனமும் இலங்கை தேசிய விளையாட்டுத்துறை கல்லூரிக்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைச்சரவையினால் தழுவு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த துறைக்கான நிபுணத்துவ அறிவு, பயிற்சிகளுக்கான சந்தர்ப்பங்கள், விளையாட்டுத்துறை உபகரணங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் விளையாட்டுத்துறைக்கான தொழிநுட்பங்கள் போன்றவற்றை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பு உருவாகும்.