• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-02-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் மனநல சுகாதார சேவையின் பொருட்டு தேவையான மனிதவளங்களை பலப்படுத்துவற்கான ஒத்துழைப்பு உடன்படிக்கை

- இலங்கையில் மனநல சுகாதார சேவைக்கு உரித்தானவாறு மனித வளங்களை பலப்படுத்துவதற்கு அவுஸ்திரேலியாவின் மெல்பேன் பல்கலைக்கழகத்தின் சனத்தொகை மற்றும் உலகளாவிய சுகாதாரத்திற்கான மெல்பேன் பயிற்சி நிறுவனத்தின் சருவதேச மனநல சுகாதார நிலையத்துக்கும், இலங்கை சுகாதார அமைச்சின் மனநல சுகாதார பணிப்பாளர் அலுவலகத்திற்கும், மனநல சுகாதார கல்லூரிக்குமிடையில் இந்த ஒத்துழைப்பு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்தை பூர்த்தி செய்யும் பொருட்டு பொதுநலவாய நாடான அவுஸ்திரேலியாவை பிரதிநிதித்துவப்படுத்தி சருவதேச அபிவிருத்திக்கான அவுஸ்ரேலியாக (AusAID) முகவராண்மையினால் 199,000 அவுஸ்த்திரேலிய டொலர்கள் கொடையாக வழங்கப்படவுள்ளது. இலங்கையின் மனநல சுகாதாரத்திற்கான மனிதவளங்களை பலப்படுத்துவது தொடர்பில் இந்த ஒத்துழைப்பு உடன்படிக்கையை ஏற்றுக் கொள்ளும் பொருட்டு சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.