• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-02-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சட்டவாக்கங்களை மீளமைத்தலும் திரட்டுதலும்

- 1956 ஆம் ஆண்டு வரைக்கும் உத்தியோகபூர்வமான தொகுக்கப்பட்ட இலங்கை சட்டவாக்கங்கள், பிரதான சட்டங்கள் அடங்கிய 12 தொகுதிகளையும் 7 துணைவிதி தொகுதிகளையும் கொண்டதாகும். இலங்கை சட்டவாக்கங்களில் இறுதியாக திருத்தியமைக்கப்பட்ட பதிப்புகளுக்கு 1956 ஆம் ஆண்டு தொடக்கம் 1980 ஆம் ஆண்டு வரையிலான சட்டப் பிறப்பிப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 1956 ஆம் ஆண்டு தொடக்கம் பிறப்பிக்கப்பட்ட சட்ட மீளமைப்புகளும் திரட்டல்களும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அச்சிடப்பட்டு வெளியிடுவதற்குத் தேவையாகவுள்ளது. இதற்கு இயைபான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.