• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-02-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
களனி பாலத்திற்கு குறுக்காக புதிய பாலமொன்றை நிருமாணிக்கும் கருத்திட்டம்

- கடந்த சில ஆண்டுகளாக கொழும்பு நகரத்தில் வாகனங்கள் குறிப்பிடதக்க அளவு அதிகரித்துள்ளமையினால், இந்த வாகன நெரிசல்களை குறைத்துக் கொள்ளும் நோக்கில் கொழும்பு நகரின் வாகனங்களை அதிவேக வீதி வலையமைப்புடன் தொடர்புபடுத்துவதற்கு மேம்பால வலையமைப்பொன்றை நிருமாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கொழும்பு நகரத்தில் அதன் அருகாமையிலுள்ள பிரதேசங்களில் அதிகரிக்கின்ற வாகன நெரிசல்களை குறைத்துக் கொள்வதற்கும் பிரிந்து செல்லக்கூடிய விதத்திலும் நடவடிக்கை எடுப்பதற்கும் கொழும்பு நகரத்தையும் கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக பாதையையும் இணைத்து களனி கங்கைக்கு குறுக்காக புதிய பாலமொன்றை நிருமாணிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. புதிய பாலத்தை உயர் யப்பான் தொழினுட்பத்தை உபயோகப்படுத்தி தற்போதுள்ள புதிய களனி பாலத்திற்கு ஒருங்கிணைவாக நிருமாணிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதுடன், 2022 ஆம் ஆண்டு தொடக்கம் 2035 ஆம் ஆண்டுவரை களனி பாலத்திற்கு அருகாமையில் உருவாகக்கூடிய வாகன நெரிசல்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு கருத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாவது புதிய களனி பாலத்தை நிருமாணிப்பதற்கு யப்பான் சருவதேச ஒத்துழைப்பு முகவராண்மையின் ஊடாக 35,020 மில்லியன் யென் (அண்ணளவாக 45,526 மில்லியன் ரூபா) கடன் தொகையை வழங்குவதற்கு யப்பான் அரசாங்கம் ஒத்துக்கொண்டுள்ளது. நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.