• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-02-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பல்துறை தொழினுட்ப, பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா நாடுகளுக்கிடையேயான அமைப்பின் நிரந்தர செயலகமொன்றைத் தாபிப்பதற்கான அகவிதி

- இது 1997 ஆம் ஆண்டு தாபிக்கப்பட்ட வலயங்களுக்கிடையிலான அரசாங்க குழுக்கிடையிலானதென்பதுடன் இது தெற்காசிய, தென்கிழக்காசிய வலயங்களுக்குரிய பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், இலங்கை, தாய்லாந்து போன்ற ஏழு (07) உறுப்பாண்மை நாடுகளைக் கொண்டதாகும். "BIMSTEC” நிரந்தர செயலகமொன்றை பங்களாதேஷ் டாக்கா நகரில் தாபிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிரந்தர செயலகமொன்றைத் தாபிப்பது தொடர்பிலான அகவிதி ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடுவதற்கு வெளிவிவகார அமைச்சர் மாண்புமிகு (பேராசிரியர்) ஜீ.எல்.பீரிஸ் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.