• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-02-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாரிய அளவிலான ஊக்குவிப்பு முயற்சியூடாக உலகலாவிய உல்லாச கைத்தொழில் அபிவிருத்தி செயல்முறை

- 2009 ஆம் ஆண்டு 447,939 ஆகவிருந்த இந்நாட்டுக்கு வருகைதந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2013 ஆம் ஆண்டில் 1,274 மில்லியனாக அதிகரித்துள்ளது. அதேபோன்று 2009 ஆம் ஆண்டு 340 மில்லியன் அமெரிக்க டொலராகவிருந்த வருமானம் 2013 ஆம் ஆண்டில் 1,500 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதன் மூலம் கடந்த ஐந்து (05) ஆண்டு காலப்பகுதிக்குள் 20% - 26% பொதுவான வருடாந்த வளர்ச்சியை காட்டுகின்றதென தெரியவருகின்றது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உல்லாசக் கைத்தொழிலின் முக்கியத்துவத்தையும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் வருகையின் மூலம் கிடைக்கின்ற 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கொண்ட நேரடி வருமானமும் 2013 ஆம் ஆண்டு 5.2 மில்லியனாக பதிவுசெய்துள்ள உள்நாட்டு உல்லாசத்துறை செயற்பாடுகளையும் கவனத்திற்கு எடுத்துக்கொண்டு 2014 ஆம் ஆண்டு தொடக்கம் இரண்டு (02) வருட காலப்பகுதிக்கு உல்லாசத்துறை கைத்தொழில் தொடர்பிலான பாரிய அளவிலான விரிவான மேம்பாட்டு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் இதற்கமைவாக தொடர் நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு பசில் ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.