• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-02-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொத்தட்டுவ நிலக்கீழ் நீர்த்தேக்கத்தை நிருமாணிப்பதற்காக சுகாதார அமைச்சுக்கு சொந்தமான I.D.H மருத்துவமனை அமைந்துள்ள காணியை குறித்தொதுக்கிக் கொள்ளல் - கொழும்பு நீர் வழங்கல் சேவை விருத்தி கருத்திட்டம் - ஆசிய அபிவிருத்தி வங்கி

- நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையுடன் இணைந்து கொழும்பு நகரம் சார்ந்த நீர் விநியோக மற்றும் அணுப்பீட்டு வலயமைப்பில் நீர் விரயத்தை குறைத்துக் கொள்வதற்கு பிரதான கருத்திட்டமொன்றை நடைமுறைப் படுத்தியுள்ளது. இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் விசேடமாக ராஜகிரிய, நாவல, கொலன்னாவை பிரதேச மக்கள் நன்மை அடைவர். கொழும்பு நகருக்கு 24 மணிநேரமும் தொடர்ச்சியான குடிநீர் வழங்குவதை உறுதிப்படுத்தும் பொருட்டு நீர் அணுப்பீடு மற்றும் விநியோக வலயமைப்பை முழுமையாக திருத்தியமைத்து விரிவுபடுத்த வேண்டிவரும். நிலத்திற்கு அடியில் நீர் களஞ்சியப்படுத்தி வைக்கக்கூடிய தொட்டியொன்றை நிருமாணிப்பதற்குப் பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ள சுகாதார அமைச்சுக்கு சொந்தமான கொத்தெட்டுவவில் உள்ள காணித் துண்டின் ஒருபகுதியை விடுவிக்குமாறு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுப்பதற்காக நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சராக மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.