• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-02-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ரிஜ்வே சீமாட்டி சிறுவர் மருத்துவமனையின் Prosthetic மற்றும் Orthotic சிகிச்சை அத்துடன் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையின் பௌதிக புனரமைப்பு நிலையம் போன்ற நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி சருவதேச அரசசார்பற்ற நிறுவனமொன்றின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுகின்ற பணிகளை முழுமையாக சுகாதார அமைச்சிற்காக பொறுப்பேற்றல்

- "Hanndicap International" சருவதேச அரசசார்பற்ற நிறுவனமானது விசேட தேவைப்பாடுகளைக் கொண்ட ஆட்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு செயற்கைக் கால்களையும் செயற்கையான உதவிக் கருவிகளையும் உற்பத்தி செய்து விசேட தேவைப்பாடுகளைக் கொண்ட ஆட்களுக்கு 2004 ஆம் ஆண்டு தொடக்கம் புனரமைப்பு சேவைகளை வழங்கி இலங்கையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. சுகாதார அமைச்சுக்கும் இந்த நிறுவனத்துக்குமிடையே கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை மூலம் அவர்களது சேவைகள் 2008 ஆம் ஆண்டு மட்டக்களப்பு போதானா மருத்துவமனைக்கும் 2009 ஆம் ஆண்டு ரிஜ்வே சீமாட்டி சிறுவர் மருத்துவமனைக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே, இந்த அமைப்பின் மூலம் மட்டக்களப்பு போதானா மருத்துவமனையிலும் கொழும்பு ரிஜ்வே சீமாட்டி சிறுவர் மருத்துவமனையிலும் நடாத்தப்பட்டு வருகின்ற பௌதிக / உடல்ரீதியான புனரமைப்பு நிலையங்கள் சுகாதார அமைச்சினால் கைச்சாத்திடப்படவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை மூலம் அரசாங்கம் பொறுப்பேற்பதற்காக மாண்புமிகு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.