• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-02-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தெதுருஓயா நீர்வழங்கல் கருத்திட்டம்

- மாகோ மற்றும் பொல்பித்திகம பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கின்ற மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வசதிகளை வழங்குவதற்கான தெதுருஓயா நீர்வழங்கல் கருத்திட்டத்திற்கு நிதியிடுவதற்காக 58,155,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கான பெறுமதியை விஞ்சாதவாறு கொரிய வொன் கடன்தொகையொன்றை பெற்றுக் கொள்வதற்காக கொரியாவின் Export - Import வங்கியின் பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதியம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்குரிய தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.