• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-02-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2014 வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ள உருளைக்கிழங்கு, பெரியவெங்காயம், செத்தல்மிளகாய் ஆகியவற்றுக்கு உத்தரவாத விலையைத் தீர்மானித்தல்

- அரசாங்கத்தினால் உள்நாட்டு கமத்தொழில் உற்பத்திகளை அதிகரிப்பதற்கும் சாதாரண விலையை உறுதிப்படுத்துவதற்கும் பெறுமதி சேர்க்கப்பட்ட கமத்தொழில் உற்பத்திகளுக்கு உள்நாட்டு வெளிநாட்டு சந்தையில் போட்டிகரமாக தடையின்றி நுழைவினை உருவாக்குவதற்கும் எதிர்பார்க்கப் படுகின்றது. மேற்போந்த குறியிலக்கை அடைவதற்காக விளைச்சல் நிலங்களின் அளவை அதிகரித்தல், உயர் விளைவுப் பெருக்கமுடைய விதைகளைப் பாவித்தல், நவீன நீர் முகாமைத்துவ முறைகளைப் பயன்படுத்துதல், வினைத்திறன்மிக்க பண்ணை தொழினுட்ப முறைகளை அறிமுகப்படுத்தல், ஏற்றியிறக்கல் செயற்பாடுகளின் போது விரையங்களைக் குறைத்தல், நவீன களஞ்சிய வசதிகளை உருவாக்குதல் போன்றவை பிரேரிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டளவில் உருளைக்கிழங்கு பெரியவெங்காயம், செத்தல்மிளகாய் உற்பத்தியில் 50 சதவீதமான தன்னிறைவைக் காண்பதற்கும் 2020 ஆம் ஆண்டளவில் மேலதிக உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கும் பிரேரிக்கப்பட்டுள்ளது. பின்வருமாறு இந்த உணவுப் பொருட்களுக்கு உத்தரவாத விலையொன்றை தீர்மானிப்பதற்கு இதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குமாக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* உருளைக்கிழங்கு கிலோ ஒன்றுக்கான உத்தரவாத உற்பத்தி விலை - ரூபா 80.00
* பெரியவெங்காயம் கிலோ ஒன்றுக்கான உத்தரவாத உற்பத்தி விலை - ரூபா 60.00
* செத்தல்மிளகாய் கிலோ ஒன்றுக்கான உத்தரவாத உற்பத்தி விலை - ரூபா 350.00
* விதைஉருளைக்கிழங்கு கிலோ ஒன்றுக்கான உத்தரவாத உற்பத்தி விலை - ரூபா 160.00
* விதை பெரியவெங்காயம் கிலோ ஒன்றுக்கான உத்தரவாத விலை - ரூபா 12,000.00