2014-02-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கிளிநொச்சி அறிவியல் நகரில் தாபிக்கப்படவுள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்திற்காக பிரேரிக்கப்பட்டுள்ள கட்டட நிருமாணிப்பு - அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 1,504 மில்லியன் ரூபாவைக் கொண்ட செலவின் மீதான மேற்போந்த ஒப்பந்தத்தை இதன்சார்பில் ஆகக்குறைந்த அனுசரணையான மதிப்பீட்டு விலையை முன்வைத்துள்ள கேள்விதாரருக்கு வழங்குவதற்காக உயர் கல்வி அமைச்சர் மாண்புமிகு எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |