• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-02-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வீட்டுப் பணியாளர்களை ஆட்சேர்ப்புச் செய்வது தொடர்பில் சவுதி அரேபிய இராச்சிய தொழில் அமைச்சுக்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்பல் அமைச்சுக்கும் இடையிலான உத்தேச உடன்படிக்கை

- உள்நாட்டு புலம்பெயர் வீட்டுப் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அவர்களுடைய நலனோம்பலைப் பாதுகாப்பதற்காகவும் இரு நாடுகளுக்கும் இடையே செய்துகொள்ளப்படவுள்ள வரைவு உடன்படிக்கைக்கு சவுதி அரேபிய இராச்சியத்தின் அரசாங்கத்தினால் அதன் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கையர்கள் சுமார் 5,000,000 பேர்கள் சவுதி அரேபிய இராச்சியத்தில் தொழில்களில் ஈடுபட்டுள்ளதோடு, இதில் 60 சதவீதமானவர்கள் பெண் வீட்டுப் பணியாளர்களாவர். சவுதி அரேபிய இராச்சியம் புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பிலான உடன்படிக்கையொன்றை பிலிப்பைன்ஸ் நாட்டுடன் மாத்திரம் செய்து கொண்டுள்ளதோடு, இத்தகைய இரண்டாவது உடன்படிக்கை 2014 சனவரி மாதம் 03 ஆம் திகதி இந்தியாவுடன் செய்துகொண்டுள்ளது. அவர்களுடைய மூன்றாவது உடன்படிக்கை இலங்கையுடன் செய்து கொள்ளப்படும் இந்த உடன்படிக்கையாகும். இது சவுதி அரேபிய இராச்சியம் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு இடையே கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கைக்குப் பெரும்பாலும் ஒத்ததாகும். இந்த உடன்படிக்கையின் முக்கிய அம்சங்களாவன:

* பணிகொள்வோர்களினால் வீட்டுப் பணியாளர்கள் சார்பில் வங்கிக் கணக்கொன்றை ஆரம்பித்து மாதாந்த சம்பளத்தை அதில் வைப்புச் செய்தல் வேண்டும். வங்கிக் கணக்கின் சேமிப்புப் புத்தகம் வீட்டுப் பணியாளரின் பொறுப்பில் இருத்தல் வேண்டும்;

* இரண்டு (02) வருட சேவைக்காலம் முடிவடைந்ததன் பின்னர், இலங்கையில் முப்பது (30) நாட்கள் முழுச் சம்பளத்துடனான லீவு உரியதாகும். வீட்டுப்பணியாளர் குறித்த பணிகொள்வோரிடமே மீளச் செல்வதாயின் அவருக்கு மேலதிக ஒரு (01) மாத சம்பளம் செலுத்தப்படுதல் வேண்டும்;

* கடவுச்சீட்டு வீட்டுப் பணியாளரின் பொறுப்பில் இருத்தல் வேண்டும்; அத்துடன்

* வேலைக்கமர்த்தும் போது வீட்டுப் பணியாளர் எவ்வித செலவினையும் ஏற்க வேண்டியதில்லை.

சவுதி அரேபிய இராச்சியத்துடன் மேற்போந்த உடன்படிக்கையைச் செய்து கொள்வதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு, நலனோம்பல் அமைச்சர் மாண்புமிகு டிலான் பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.