• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-02-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1998 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க இலங்கை தேசிய நீர்வளமூலங்கள் அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் 37 ஆம் பிரிவின் (1) ஆம் உபபிரிவின் (இ) ஆம் பந்தியின் கீழ் கடற்றொழில், நீரகவளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சரினால் ஆக்கப்பட்ட 2011 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க ஏற்றுமதிக்கான செயற்கை திடப்பொருட்களில் நீர்வளமூலங்களை வளர்ப்பதற்கான கட்டளை

- உலகத்தின் பல்வேறுபட்ட நாடுகள் கரைக்கண்மித்த கடலிலும் அதே போன்று உள்ளூர் நீர்பரப்புகளிலும் விசேடமான உயிரின பல்வகைமைகள் உள்ள பிரதேசங்கள் உயிர்வாழ் உயிரினங்களை செயற்கை திடப்பொருட்களை வைப்பதற்கு பயன்படுத்துகின்றன. உயிருள்ள உயிரினங்களுடனான செயற்கைத் திடப்பொருட்கள் உவர்நீர் மற்றும் நன்னீர் அழகு மீன் இனங்கள் நீர்தேக்கங்களை அழகுபடுத்துவதற்காப் பயன்படுத்த முடியும். இந்த விடயத்திற்குரிய கட்டளைகள் உள்ளடக்கப்பட்ட 2011‑11‑30 ஆம் திகதியிடப்பட்டதும் 1734/12 ஆம் இலக்கத்தைக் கொண்டதும் 2011‑11‑30 ஆம் திகதியிடப்பட்டதும் 1786/26 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக கடற்றொழில், நீரகவளமூலங்கள் அபிவிருத்தி் அமைச்சர் மாண்புமிகு ராஜித்த சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.