• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-02-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கிளிநொச்சியிலுள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கமத்தொழில் பீடத்தையும் பொறியியல் பீடத்தையும் அபிவிருத்தி செய்தல்

- இந்திய அரசாங்கத்தின் சிறு அபிவிருத்திக் கருத்திட்ட கொடை அணுசரனை மூலம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கமத்தொழில், பொறியியல் பீடங்களுக்காக பீடமொன்றுக்கு 300 மில்லியன் ரூபா வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. கமத்தொழில் பீடத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள 300 மில்லியன் ரூபாவின் மூலம் கேட்போர் கூடம், கணனிப் பிரிவு, நூலகம், உள்ளக விளையாட்டரங்கம் ஆகிய வசதிகளை வழங்கும் திறமை அபிவிருத்தி நிலையமொன்றைத் தாபிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. பொறியியல் பீடத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள 300 மில்லியன் ரூபாவின் மூலம் தேவையான உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் உட்பட சிவில் மற்றும் பொறிமுறை பொறியியல் கற்கை பிரிவுக்கான கட்டடமொன்றையும் நிருமாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்குரிய தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காக உயர் கல்வி அமைச்சர் மாண்புமிகு எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.