• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-01-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தங்கல்லை மறியற்சாலையையும் கொழும்பு வெலிக்கடை மறியற்சாலையின் ஒரு பகுதியையும் அங்குணகொலபெலஸ்ச, எரமிணியாய பிரதேசத்திற்கு கொண்டு செல்லல்

- தங்கல்லை மறியற்சாலையையும் கொழும்பு வெலிக்கடை மறியற்சாலையின் ஒரு பகுதியையும் அங்குணகொலபெலஸ்ச, எரமிணியாய பிரதேசத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு மேற்போந்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் மாண்புமிகு சந்திரசிறி கஜதீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.