• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-01-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உர கொள்வனவு - சிறுபோகம் - 2014

- சலுகை விலையின் கீழ் கமக்காரர்களுக்கு உரம் வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் கமத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் வரையறுக்கப்பட்ட இலங்கை உரக் கம்பனி (லக் பொஹர) மற்றும் வரையறுக்கப்பட்ட கொழும்பு கொமர்சல் உரக் கம்பனி ஆகியவற்றினால் செயற்படுத்தப்படுகின்றது. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 2014 சிறுபோகத்திற்குத் தேவையான உரக் கொள்வனவுக்காக கமத்தொழில் அமைச்சர் மாண்புமிகு மஹிந்த யாப்பா அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.