• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-01-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புதிய தொழினுட்ப பாடப்பிரிவில் கற்கும் குறைந்த வருமானம் பெறும் மாணவிகளுக்கு வழங்கப்படும் "சுஜாத்த தியனி" நிதியம்

- நமது நாட்டில் ஒளிபரப்பப்பட்ட ஜனரஞ்சகமான தொலைக்காட்சி நாடகமொன்றாகிய "சுஜாத்த தியனி" நாடகத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த திருமதி லீ யங் ஏயினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 100,000 யுஎஸ் டொலர்கள் கொண்ட தொகையை பயன்படுத்தி புலமைப்பரிசில் நிதியமொன்றை தாபிப்பதற்காக கல்வி அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதன் முதற்கட்டமாக க.பொ.த (உ/த) தொழினுட்பப் பாடப்பிரிவில் கற்கும் ஆகக்கூடிய தகைமைகளை உடைய குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் ​சேர்ந்த பத்து (10) மாணவிககள் வீதம் ஒரு மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்து மாணவி ஒருவருக்கு மாதமொன்றுக்கு 500/= ரூபா வீதம் இந்த நிதியத்திலிருந்து புலமைப்பரிசிலாக வழங்கப்படவுள்ளது. கல்வி அமைச்சர் மாண்புமிகு பந்துல குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.