• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-01-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை தொலைதொடர்புகள் ஒழுங்குறுத்துகை ஆணைக்குழு மனையிடத்தில் தேசிய கருவிகள் அடையாளம் காணும் ஆவணமொன்றைத் (National Equipment Identity Register (NEIR)) தாபித்தல்

- நாட்டில் தற்போது 2.2 மில்லியன் செல்லிடத்தொலைபேசி பாவணையாளர்கள்உள்ளதோடு, போலியான செல்லிடத்தொலைபேசி விற்பனையை மட்டுப்படுத்துவதற்கும் செல்லிடத் தொலைபேசி களவாடப்படுதலை தடுப்பதற்குமாக நுகர்வோரைப் பாதுகாக்கும் நோக்கில் இலங்கை தொலைதொடர்புகள் ஒழுங்குறுத்துகை ஆணைக்குழுவினால் செல்லிடத்தொலைபேசி பாவணையாளர்களுக்காக தேசிய கருவிகள் அடையாளம் காணும் ஆவணமொன்றைத் (National Equipment Identity Register (NEIR)) தாபிப்பதற்குத் தீர்மானித்துள்ளது. செல்லிடத்தொலைபேசியில் சிம்அட்டையை மாற்றினாலும் ஒருவலையமைப்பில் கறைநிரல்படுத்திய செல்லிடத்தொலைபேசி முனையங்கள் ஏனைய வலையமைப்பில் இயங்காமையை சகல வலையமைப்பு பயன்பாட்டாளர்களுக்கும் உறுதிப்படுத்துவதற்கான மத்தியமயப்படுத்தப்பட்ட வகைமுறையொன்றாக இந்த தேசிய கருவிகள் அடையாளம் காணும் ஆவணம் (National Equipment Identity Register (NEIR)) செயற்படும். இதற்குரிய தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காக அதிமேதகைய சனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.