• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-01-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உலர்வலய நகர நீர் மற்றும் துப்பரவேற்பாட்டுக் கருத்திட்டம்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு பின்வரும் ஒப்பந்தங்கள் இரண்டையும் வழங்குவதற்காக நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு (02) பிரேரிப்புகளுக்கும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது:

* குழாய்கள், சுயமாக இயங்கும் வகைமுறைகள், மின்சார மற்றும் பொறிமுறை கருவிகள் ஆகியவற்றை வழங்குதலும் பொருத்துதலும் - வவுனியா நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் களஞ்சியப்படுத்தல் பிரதேசங்களை நிருமாணித்தல்;
* குழாய்கள், சுயமாக இயங்கும் வகைமுறைகள், மின்சார மற்றும் பொறிமுறை கருவிகள் ஆகியவற்றை வழங்குதலும் பொருத்துதலும் - சிலாபம், புத்தளம் நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் களஞ்சியப்படுத்தல் பிரதேசங்களை நிருமாணித்தல்;