• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-01-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஹொரண, குண்டசாலை மற்றும் தியகம அயனமண்டல வலய உயிரின பல்வகைமை பழவகைப் பூங்காவை அபிவிருத்தி செய்தல்

- பழ வகைகளுக்கு உள்நாட்டு அதேபோன்று வெளிநாட்டு சந்தைகளில் கேள்வி அதிகரித்து வருகின்றமை கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. புதிய இனங்களை அறிமுகப்படுத்துதல், தரம்மிக்க விதைகளையும் நடுகைப் பொருட்களையும் உற்பத்தி செய்தல் அதேபோன்று பழச் செய்கையின்பால் மக்களின் எதிர்பார்ப்பு, ஊக்கம் ஆகியவற்றை மேம்படுத்துதல், சிபாரிசு செய்யப்பட்ட வகைகளின் ஆரம்ப பொருட்களை வழங்குதல் போன்ற நோக்குடன் ஹொரண, குண்டசாலை மற்றும் தியகம அயனமண்டல வலய உயிரின பல்வகைமை பழவகைப் பூங்காக்களைத் தாபிக்கும் ஆரம்ப கட்டம் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இதற்குரிய தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காக கமத்தொழில் அமைச்சர் மாண்புமிகு மஹிந்த யாப்பா அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.