• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-01-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுவிட்சர்லாந்து பேர்ன் நகரத்தில் இலங்கை வதிவிட இராசதந்திர தூதரகமொன்றை நிறுவுதல்

- 2012 ஆம் ஆண்டில் 54,932 இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வருகின்றனர். சுவிட்சர்லாந்து அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களுக்கு பல தசாப்தகாலமாக இலங்கைக்கு இருபக்க ஒத்தாசையை வழங்கியுள்ளது. 2012 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்குமிடையே நிலவிய மொத்த வர்த்தகப் பெறுமதி 325.76 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாகும். கைத்தொழில் மயப்படுத்தப்பட்ட பிரதான நாடொன்றாக ஐரோப்பிய சந்தையின் நுழைவு வாயிலான சுவிட்சர்லாந்துக்கு செய்யப்படும் ஏற்றுமதிகளின் அளவினை அபிவிருத்தி செய்வதற்கு கணிசமான ஆற்றல் நிலவுகின்றமை கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 2014 பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து செயல்வலுவுக்கு வரத்தக்கதாக சுவிட்சர்லாந்தின் தலைநகரமான பேர்ன் நகரத்தில் இலங்கை இராசதந்திர தூரகத்தை தாபிப்பதற்கும் இதற்குரிய தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காகவும் வெளிவிவகார அமைச்சர் மாண்புமிகு (பேராசிரியர்) ஜீ.எல்.பீரிஸ் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.