• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-01-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தீங்காக அமையாத விலைக்கு கால்நடை உணவுகளை வழங்குவதன் மூலம் பால் உற்பத்தியை அதிகரித்தல்

- அரசாங்கத்தின் நோக்கமாவது சகல பால் உற்பத்திகளிலும் நாடு தன்னிறைவை அடைவதாவதோடு, உள்நாட்டு கைத்தொழிலொன்றாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய முக்கிய துறையொன்றாக பால் உற்பத்திக் கைத்தொழில் இனங்காணப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டில் 299 லீற்றர் பால் உற்பத்தி செய்யப்பட்டு நாட்டின் பால் தேவையின் 40 சதவீதத்தை அண்மித்துள்ளதோடு, 2011 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 16 சதவீதமான அதிகரிப்பொன்றாகும். ஒரு லீற்றர் பால் உற்பத்திக்கான செலவின் 40 சதவீதம் வைகிக்கப்படுவது முக்கியமாக சோளம், தவிடு, தேங்காய் புண்ணாக்கு, கோதுமை தவிடு, கணிமங்கள், விற்றமின்கள் கலவையான உணவுமூலமாகும். இவை விலங்கு உணவுக்கு தீங்காக அமையாத விலைக்கு கால்நடை உணவுகளை வழங்குவதற்கு இயலுமாகும் விதத்தில் தேங்காய் புண்ணாக்கு மற்றும் தவிடு ஏற்றுமதியை வரையறுப்பதற்கான நடவடிக்கைளை எடுப்பதற்காக கால்நடைவளர்ப்பு, கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு ஆறுமுகன் தொண்டமான் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.