• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-01-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பதுளை மாவட்டத்தின் மொரான நீர்த்தேக்க கருத்திட்டத்திற்கு காணி சுவீகரிக்கப்படுவதன் விளைவாக பாதிப்புக்கு உள்ளாகும் ஆட்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டம்

- பதுளை மாவட்டத்தின் ரிதீமாளியத்த பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மொரான நீர்த்தேக்கம், நாகதீப திட்டத்தின் நீர் பற்றாக்குறையை தவிர்ப்பதற்கான புதிய நீர்ப்பாசனக் கருத்திட்டமாகும். இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாகதீப திட்டத்தின் கீழுள்ள சுமார் 1,500 ஏக்கா் வயற்காணிகளுக்கு சிறுபோகம் மற்றும பெருபோகம் ஆகிய இரு போகங்களிலும் நீர் வழங்குவதற்கும் இந்த பிரதேசத்தின் மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கும் இயலுமாகும். இந்த நீர்தேக்கத்திற்காக சுமார் 250 ஹெக்டயார் விஸ்தீரணமுடைய காணி சுவீகரிக்கப்பட வேண்டிய தேவை உள்ளதோடு, காணி இல்லாமற் போவதனால் இடம்பெயரும் ஆட்களை லிகினியாய மற்றும் அல்தெனிய கிராமங்களில் மீளக்குடியமர்த்துவதற்கும் நிவாரணம் வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. காணி இல்லாமற் போகும் ஆட்களின் சொத்துகளுக்கு நட்டஈடு செலுத்துவதற்கும் மீளக்குடியமர்த்துகையில் நிவாரணங்கள் ஏற்பாடு செய்வதற்குமாக நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சர் மாண்புமிகு நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.