• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-01-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இறக்குமதி பொருட்களுக்கு இலங்கை தரங்களை அறிமுகப்படுத்துதல்

- 2006 ஆம் அண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி (கட்டளைகள், தரக்கட்டுப்பாடு) கட்டளைகளை திருத்தி இறக்குமதி செய்யப்படும் 23 பொருட்களுக்காக புதிய இலங்கை கட்டளைகளையும் தரக்கட்டுப்பாடுகளையும் அறிமுகப்படுத்திய 2014‑01‑08 ஆம் திகதியிடப்பட்டதும் 1844/49 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.