• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-01-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முதலாம் கருத்திட்டத்தின் II ஆம் கட்டத்தின் கீழ் மீதி 2,500 கறவைப் பசுக்களையும் மேலும் 20,000 கறவைப் பசுக்களையும் இறக்குமதி செய்தல்

- நாட்டில் நிலவும் கேள்விக்கு ஏற்றவாறு அரசாங்கத்தினால் உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு உயர் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. கருத்திட்டத்தின் I ஆம் கட்டத்தின் கீழ் இறக்குமதி செய்வதற்காக பிரேரிக்கப்பட்டுள்ள 4,500 கறவைப் பசுக்களிலிருந்து ஏற்கனவே 2,000 ம் கறவைப் பசுக்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டில் II ஆம் கட்டத்தின் கீழ் மீதி 2,500 கறவைப் பசுக்களை இறக்குமதி செய்வதற்கும் அம்பாந்தோட்டை ரிதியகம பண்ணையின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கு அமைவாக மேற்குறிப்பிட்ட மீதி 2,500 கறவைப் பசுக்களையும் மேலதிகமாக உயர்தரத்தைச் சேர்ந்த 20,000 கறவைப் பசுக்களையும் இறக்குமதி செய்வதற்கு நெதர்லாந்து வங்கியிலிருந்து கடன் தொகைகளைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக இயைபுள்ள வங்கியுடன் கடன் உடன்படிக்கைகளைச் செய்து கொள்ளும் பொருட்டு நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.