• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-01-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய பசுபிக் அஞ்சல் சங்கத்தின் 2014 ஆம் ஆண்டின் வருடாந்த நிறைவேற்று குழுக்கூட்டத்தை இலங்கையில் நடாத்துதல்

- ஆசிய பசுபிக் அஞ்சல் சங்கம் வலயத்திலுள்ள 32 நாடுகளைக் கொண்ட அமைப்பொன்றாகும். இதன் நோக்கம் அஞ்சல் சேவைகளை வழங்கும் போது உறுப்பு நாடுகளுக்கிடையில் மிகச் சிறந்த உறவை மேம்படுத்துவதாகும். ஆசிய பசுபிக் அஞ்சல் சங்கத்தின் 50 ஆவது வருடாந்த நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தை இலங்கையில் நாடாத்துவதற்கும் சருவதேச முத்திரைக் கண்காட்சியை ஒழுங்கு செய்வதற்கும் உரியதான தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காக மாண்புமிகு அஞ்சல் சேவைகள் அமைச்சர் மாண்புமிகு ஜீவன் குமாரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.