• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-01-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஐக்கிய நாடுகள் அமைப்பின் கீழுள்ள உணவு, கமத்தொழில் அமைப்பின் ஒத்துழைப்புடன் நடாத்தப்பட்ட சருவதேச இயற்கை நார் மாநாடு

- 47 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் இந்த மாநாடு 2013 நவெம்பர் மாதம் இலங்கையில் நடாத்தப்பட்டது. அனுசரணை நாடாக எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு இலங்கைக்கு இயற்கை நார் பற்றிய சருவதேச அரச குழுவில் அங்கத்துவம் வழங்கப்பட்டது. உலகில் கூடிய அளவு தும்பு உற்பத்தி ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கிடையில் இரண்டாவது இடத்தை வகிக்கும் இலங்கை ஏற்கனவே பெறுமதி சேர்க்கப்பட்ட நார் துறையில் உற்பத்திகளை ஊக்குவிக்கும் கொள்கையைக் கொண்டுள்ளது. தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு ஜகத் புஷ்பகுமார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.