• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-01-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய பசுபிக் வலயத்தின் தெங்குத்துறை அபிவிருத்தியின் பொருட்டு நடாத்தப்பட்ட உயர்மட்ட நிபுணத்துவ ஆலோசனை செயலமர்வு

- ஐக்கிய நாடுகளின் உலக உணவு, கமத்தொழில் அமைப்பின் தாய்லாந்தின் பங்கொக் நகரத்திலுள்ள ஐக்கிய நாடுகளின் வலய அலுவலகத்தின் அழைப்பின் பேரில், தனது தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று இந்த செயலமர்வில் கலந்துகொண்டதாக தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு ஜகத் புஷ்பகுமார அவர்களினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது. இந்த ஆலோசனை செயலமர்வுக்கு சீனா, பீஜிதீவுகள், இந்தியா, இந்தோனேஷியா, மாலைத்தீவு, பிலிப்பைன்ஸ், சமோவா, சொலமன் தீவுகள், இலங்கை, தாய்லாந்து, டொங்கா, வியட்னாம், வனவாட்டு ஆகிய உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த செயலமர்வின் நோக்கம் ஆசிய பசுபிக் வலய தெற்கு சமூக நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் 18 இல் எல்லா நாடுகளும் தற்போது தெங்குத் தொழிலில் முகங்கொடுத்துள்ள நிலைமை தொடர்பிலான முக்கிய பிரச்சினைகளை கண்டறிந்து எதிர்கால அபிவிருத்திக்கு தீர்வுகளை முன்மொழிவதாகும். உற்பத்தியிலும் திட்டமிடலிலும் உணவு, கமத்தொழில் அமைப்பு, ஆசிய பசுபிக் வலய தெற்கு சமூக நிறுவனம் உட்பட அந்தந்த நாடுகளினால் பின்னூட்டல் செய்யப்படவேண்டிய சிபாரிசுகள் சிலவும் இந்த செயலமர்வில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.