• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-01-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நாட்டில் நிலவும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் எடுக்கப்படும் நடவடிக்கைகள்

- கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது 2013 ஆம் ஆண்டில் பல ஆசிய நாடுகளில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளமை அறிக்கையிடப்பட்டுள்ளது டெங்கு நோயானது தொடர்ந்தும் இலங்கைக்குச் சவாலாகவுள்ள சுகாதார பிரச்சினையாக இருந்தாலும், சுகாதார அமைச்சினால் மாகாண அதிகாரபீடங்களுடனும் ஏனைய நிறுவனங்களுடனும் இணைந்து முன்நோய் நிர்ணயிப்பு மூலமும் நோய் பரவும் நிலைமை வரை அதிகரிக்கும் நிலைமைக்குத் துரிதமாக எதிர்விளைவுகளை எடுப்பதன் மூலமும் டெங்கு நோய் பரவுவதன் மூலம் நிகழக்கூடிய பிரதிகூலமான பாதிப்புகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக 2012 ஆம் ஆண்டு அறிக்கையிடப்பட்ட 40,823 டெங்கு நோயாளர்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இறுதியில் குறித்த ஆண்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 27,991 பேர்களாக அதாவது 32 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதோடு, 2012 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 168 மரணங்களுடன் ஒப்பிடும் போது, 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் இந்த எண்ணிக்கை 78 ஆக குறைந்துள்ளது. சுகாதார அமைச்சினால் அதிமேதகைய சனாதிபதியின் வழிகாட்டலின் கீழும் சனாதிபதியின் செயலணியினதும் மற்றும் ஏனைய தரப்பினர்களினதும் ஒத்துழைப்புடனும் டெங்கு நோயை ஒழிப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுள் சில பின்வருமாறாகும்:

* சனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்ட சுற்றுநிருப அறிவுறுத்தல்களின் பிரகாரம் செயலணியின் தீர்மானங்களுக்கமைவாக அரசாங்க நிறுவனங்கள் யாவும் நுளம்பு பரவுவலைத் தடுத்தல் மற்றும் ஒழித்தல் என்பவற்றைப் பரிசீலனை செய்வதற்காக பொறுப்புச் சொல்லவேண்டிய விசேட பிரிவொன்றைத் தாபித்து அதனூடாக சுகாதார அமைச்சிற்கும் மாகாண சுகாதார அமைச்சிற்கும் அதன் செயற்பாடுகள் பற்றி மாதாந்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டமை;

* நோய் நிர்ணயிப்புக்காக அர்ப்பணிக்கப்பட்ட நுண்ணுயிர் ஆய்வுக்கூடமொன்று அடங்கலாக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சொந்தமான இரசாயனக்கூட வசதிகள் மேம்படுத்தப்பட்டமை;

* இந்த நோக்கத்திற்காக மருத்துவர்களும் தாதி உத்தியோகத்தர்களும் அடங்கலாக 2,000 இற்கும் மேற்பட்ட சிகிச்சை பதவியினர்களை வழங்கி, 200 இற்கு கிட்டிய HDU பிரிவுகள் தாபிக்கப்பட்டு சிகிச்சைப் வசதிகள் விரிவுப்படுத்தப்பட்டமை;

* நுளம்பு கட்டுப்பாட்டு வாரமொன்றை பிரகடனப்படுத்துவதற்கும் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக வேலைத்திட்டங்கள் உட்பட இதற்குச் சமமான பணிகளும் செயற்படுத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 10,808 பேர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு, தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் 9,100 பேர்கள் குற்றவாளியாக்கப்பட்டமை.

இது சம்பந்தமாக பிரேரிக்கப்பட்டுள்ளவாறு தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காக சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.