• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-01-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாலஸ்தீன நாட்டிலுள்ள ரமல்லா நகரில் பாலஸ்தீனிய இளைஞர்களுக்கான பயிற்சி நிலையமொன்றை நிறுவுதல்

- ஆரம்பத்தில் ஐந்து (05) வருட காலப்பகுதிக்கு பாலஸ்தீன இளைஞர்களின் சுற்றுலா நடவடிக்கைகள், உபசரிப்பு நடவடிக்கைகள், மத்திய மட்டத்திலான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைள் (தாதிச் சேவை) மற்றும் இதற்கு சமமான தொழில்கள் போன்ற  துறைகளில் பயிற்சி அளிப்பதற்காக பாலஸ்தீன நாட்டின் ரமல்லா நகரில்  பயிற்சி நிலையமொன்றைத் தாபிப்பதற்குப் பிரேரிக்கப்பட்டுள்ளது.  2014 சனவரி மாத்திலிருந்து இந்த பயிற்சி நிலையத்தை தாபித்து ஆரம்ப கட்டமாக ஐந்து (05) வருடகாலத்திற்கு அதன் நிருவாக பணிகளை நடாத்திச் செல்வதற்காக வெளிவிவகார  அமைச்சர்  மாண்புமிகு (பேராசிரியர்) ஜீ.எல்.பீரிஸ் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.