• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-01-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மத்திய, ஊவா மாகாணங்களில் 64.31 கிலோ மீற்றர் வீதிகளை வியாபித்தல், மேம்படுத்துதல் உட்பட 13 பாலங்களை நிருமாணிப்பதற்காக Hunan Construction Engineering Group Corporation நிறுவனத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு அங்கீகாரம் கோரல்

-   அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு பின்வரும் ஐந்து (05) வீதிப் பகுதிகளை வியாபித்தல், மேம்படுத்துதல் உட்பட 13 பாலங்களை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக   துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், கப்பற்றுறை அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது :

* அவிசாவலை  – ஹட்டன் - நுவரெலியா  வீதி (98.9 கிலோ மீற்றரிலிருந்து 108.49 கிலோ மீற்றர் வரை ) . 
* வெலிமடை  – கக்லீஸ் வீதி (0.00 கிலோ மீற்றரிலிருந்து 17.83 கிலோ மீற்றர் வரை ) ;

* நுவரெலியா  – ராகலை - உடுபுஸ்சல்லாவ வீதி (19.00 கிலோ மீற்றரிலிருந்து 46.00 கிலோ மீற்றர் வரை ) ;

* அம்பிட்டிய  – குருதெனிய  வீதி (0.00 கிலோ மீற்றரிலிருந்து 2.25 கிலோ மீற்றர் வரை ) ;

* கண்டி  – கிரிமெட்டிய  வீதி (0.00 கிலோ மீற்றரிலிருந்து 7.64 கிலோ மீற்றர் வரை ) ;