• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-01-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சீன அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் முன்னுரிமை வீதிக் கருத்திட்டம் - 3 - (கட்டம் 1 - லொட் 2) ஒப்பந்தங்களை வழங்குவதற்கு அங்கீகாரம் கோரல்

- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு பின்வரும் வீதிப் பகுதிகளை புனரமைப்பதற்கான ஒப்பந்தங்களை வழங்குவதற்காக   துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், கப்பற்றுறை அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது :

* ஹட்டன் – மஸ்கெலிய - டெல்ஹவுஸ் வீதி (0.00 கிலோ மீற்றரிலிருந்து 31.89 கிலோ மீற்றர் வரை).
* மாவனல்ல – ஹெம்மாத்தகம – கம்பொல  வீதி (0.00 கிலோ மீற்றரிலிருந்து 26.00 கிலோ மீற்றர் வரை);

* அயகம – ஏகல்ஓயா வீதி (0.00 கிலோ மீற்றரிலிருந்து 23.00 கிலோ மீற்றர் வரை);

* நாரந்தெனிய – ஹக்மன வீதி (0.00 கிலோ மீற்றரிலிருந்து 11.95 கிலோ மீற்றர் வரை);