• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-01-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறுபராய பாதுகாப்பும் கல்வியும் பற்றிய கொள்கைகளுக்கான ஆசிய பசுபிக் வலய சம்மேளனம் - சோல் நகரம் கொரியா

-  மேற்போந்த சம்மேளனம் 2013 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் தென்கொரியாவில் சோல் நகரத்தில் நடத்தப்பட்டதோடு,  கல்வி  அமைச்சர் மாண்புமிகு பந்துல குணவர்த்தன அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டதோடு, விசேடமாக பின்வரும் விடயங்கள் பற்றி கலந்துரையாடல்கள்  மேற்கொள்ளப்பட்டதாக மாண்புமிகு அமைச்சரினால்  அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது.

* தொழினுட்ப ஆய்வுகூடங்களுக்குத் தேவையான உபகரணங்களைப் பெற்றுக் கொள்ளல்.
* தகவல் தொழினுட்ப துறையில் இலங்கை மாணவர்களுக்கு கொரிய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு பாடநெறிகளுக்கு புலமைப்பரிசில்கள் வழங்குதல் ; அத்துடன்

* க.பொ.த(உ/த) ​தொழினுட்ப விடயங்களை கற்பிப்பதற்குத் தேவையான ஆசிரியர்களுக்காக வருடாந்தம் நடாத்தப்படும் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு தொழினுட்ப உதவிகளைப்  பெற்றுக் கொள்ளல் ;