• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-01-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அணுசக்தி அதிகாரசபையினாலும் அதன் துணை நிறுவனங்களினாலும் நிறுவப்பட்டுள்ள நிறுவனங்களை முகாமித்தல், தொழிற்படுத்தல், பராமரித்தல் ஆகியவற்றுக்காக தனியார் கம்பனியொன்றை தாபித்தல்

- அரசாங்கத்திற்கு சொந்தமான பல்பணி கமா கதிரியக்க வசதிகள் மற்றும் சேதம் விளைவிக்காத தேசிய பரிசோதனை நிலையங்கள் உட்பட வர்த்தக தொழிற்பாடுகளுக்காக அணுசக்தி அதிகாரசபையினால் தாபிக்கக்கூடிய ஏனைய இத்தகைய நிறுவனங்கள் ஆகியவற்றை முகாமிப்பதற்கும் பராமரிப்பதற்குமாக அணுசக்தி அதிகாரசபையினால் உரிமை கொண்டாடும் வரையறுக்கப்பட்ட பொறுப்புகளுடனான தனியார் கம்பனியொன்றை தாபிக்கும் பொருட்டு   தொழினுட்ப, ஆராய்ச்சி அமைச்சர் மாண்புமிகு பாட்டலி சம்பிக்க றணவக்க  அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.