• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-01-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கண்டாவளை பிரதேச செயலகத்துக்கு புதிய இரண்டுமாடிக் கட்டடமொன்றை நிருமாணித்தல்

- வடமாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டம் அமைந்துள்ளதோடு,  இந்த பிரதேச செயலகம் 16 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைக் கொண்டுள்ளதோடு, இதன் மொத்த சனத்தொகை 24,235  ஆகும். பொது மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக  67.72 மில்லியன் ரூபாவைக் கொண்ட செலவின் மீது இந்த பிரதேச செயலகத்திற்கு இரண்டு மாடி கட்டடமொன்றை நிருமாணிப்பதற்காக பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு டபிள்யு.டீ.ஜே.செனெவிரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.