• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-01-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பறவை / உலகம் முழுவதும் பரவக்கூடிய தொற்று காய்ச்சல் தடுப்பு கருத்திட்டம்

- பறவை / உலகம் முழுவதும் பரவக்கூடிய தொற்று காய்ச்சல் தடுப்பு கருத்திட்டமொன்றைச் செயற்படுத்துவதற்காக ஐந்து (05) வருடகாலத்திற்கு Centres for Disease Control & Prevention - USA நிறுவனத்தினால் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவுக்கு நிதி வழங்கப்படவுள்ளது.  புவியியல் அமைவிடம், கோழிப் பண்ணைகள் கணிசமான எண்ணிக்கையில் நிலவுதல் மற்றும் சுற்றுலா பறவைகளின் எல்லையாக காணப்படுதல் போன்ற காரணங்களினால் இலங்கை H5N1 பறவைக் காய்ச்சலுக்கு ஆளாகும் உயர் அவதானத்துடனான நாடொன்றாக கருதப்படுகின்றது. இந்த நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அடுத்து வரும் ஐந்து (05) ஆண்டுகள் முழுவதும் (2014-2018) தவணைமுறையில் 852,050 ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்குச் சமமான தொகையொன்று வருடாந்தம் கிடைக்கப் பெறவுள்ளது. மேற்போந்த கருத்திட்டத்திற்குரிய தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காக  சுகாதார அமைச்சர்  மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன  அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.