• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-12-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சீனாவின் உதவியின் கீழ் மீயுயர் நீதிமன்ற கட்டடத்தொகுதியின் பராமரிப்புக் கருத்திட்டம்

- சீனாவின் உதவியின் கீழ் நிருமாணிக்கப்பட்ட மீயுயர் நீதிமன்ற கட்டடத்தொகுதியை பராமரித்து புதுப்பிப்பதற்கான கருத்திட்டத்திற்கு சீனா அரசாங்கம் ஒத்துக் கொண்டுள்ளது. உரிய சட்டத்தின் கீழ் விசேட கருத்திட்டமாக இந்தக் கருத்திட்டத்தை அங்கீகரிப்பித்துக் கொண்டதன் பின்னர், இந்தக் கருத்திட்டத்திற்குத் தேவையான பொருட்களுக்கு உரிய வரி மற்றும் கட்டணங்களிலிருந்து விலக்களிப்பதற்காக நீதி அமைச்சர் மாண்புமிகு ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.