• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-12-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்நாட்டு சந்தைக்கு பெற்றோல் 90 RON இற்குப் பதிலாக பெற்றோல் 92 RON ஐ அறிமுகப்படுத்தல்

- இலங்கையில் விற்பனை செய்வதற்குப் பொருத்தமான பெற்றோல் வகைக்கான கட்டளை நியமங்களுக்கு உரியதாக செய்யப்பட்ட பகுப்பாய்வுக்கமைவாக ஏற்கனவே பயன்படுத்தப்படுகின்ற 90 (RON) பெற்றோல் வகையுடன் ஒப்பிடும் போது இதனைவிட மிகவும் நன்மை பயக்கக்கூடிய 92 (RON) பெற்றோல் வகை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. 2014‑01‑01 ஆம் திகதியிலிருந்து செயல்வலுவுக்கு வரத்தக்கதாக 92 (RON) பெற்றோல் வகையை உள்ளூர் சந்தையில் அறிமுகப்படுத்துவதற்காக பெற்றோலியக் கைத்தொழில்கள் அமைச்சர் மாண்புமிகு அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.