• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-12-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கருத்திட்டங்கள் அல்லாத மானிய உதவியின் கீழ் கைத்தொழில் உபகரணங்களின் கொள்வனவுக்காக யப்பானிடமிருந்து 520 மில்லியன் ரூபா கொண்ட (யப்பான் யென் 400) மானியம்

- வருடாந்த யென் கடன் பொதிக்கு மேலதிகமாக இரு நாடுகளுக்கிடையே நட்புறவையும் ஒத்துழைப்பையும் பலப்படுத்தும் நோக்கில் யப்பான் அரசாங்கத்தினால் பல்வேறுபட்ட மானியங்கள் வழங்கப்படுவதோடு, கருத்திட்டம் அல்லாத மானிய முறை இதில் ஒன்றாகும். இதற்கமைவாக, இந்தக் கருத்திட்டம் அல்லாத மானிய உதவியின் கீழ் 2013/2014 நிதியாண்டுக்காக யப்பான் அரசாங்கத்தினால் இலங்கை பிரஜைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருட்டு சுகாதார வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக சுகாதார அமைச்சின் போதனா வைத்தியசாலைகளுக்கும் இரண்டாம்நிலை மருத்துவமனைகளுக்கும் மருத்துவ ஆராய்ச்சி நிலையங்களுக்கும் மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்காக பயன்படுத்தும் பொருட்டு 400 மில்லியன் யப்பான் யென் கொடையொன்றை வழங்குவதற்கு யப்பான் அரசாங்கம் ஒத்துக்கொண்டுள்ளது. இந்தக் நோக்கத்திற்காக யப்பான் அரசாங்கத்துடன் பரிமாற்றப் பத்திரங்களை கைச்சாத்திடுவதற்காக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.