• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-12-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய அபிவிருத்தி வங்கியினதும் யப்பான் சருவதேச ஒத்துழைப்பு முகவராண்மையினதும் கடன்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கருத்திட்டங்களின் நோக்கங்களை விரிவுபடுத்துதல்

- ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்ட மூன்று கடன் தொகைகளிலிருந்தும் யப்பான் சருவதேச ஒத்துழைப்பு முகவராண்மையிடமிருந்து கிடைக்கப் பெற்ற கடன் தொகையிலிருந்தும் சேமிப்பாக காணப்படும் நிதியை கடன் வழங்கிய நிறுவனங்களின் உடன்பாட்டுடன் சுன்னாகம், பொலன்நறுவை, மொனறாகலை, வாழைச்சேனை, மாகோ, நாவுல, புத்தளம், கிளிநொச்சி, வவுனியா, களனி மற்றும் கிரிபத்கும்புர நெய்யறி துணை நிலையங்களுக்குரிய மீதி வேலைகளைச் செய்வதற்காக பயன்படுத்தும் பொருட்டு மின்வலு, சக்தி அமைச்சர் மாண்புமிகு (திருமதி) பவித்திரா வன்னிஆரச்சி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது