• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-12-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிலாபம், புத்தளம் நீர் மேற்பரப்புகளை அபிவிருத்தி செய்தல் - ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடனான உலர்வலய நகர நீர், துப்பரவேற்பாட்டுக் கருத்திட்டம்

- இந்தக் கருத்திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்தாசையுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது அமைச்சர வையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள ஆகக்குறைந்த அனுசரணையான மதிப்பீட்டு விலையை முன்வைத்துள்ள கேள்விதாரருக்கு மேற்போந்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது