• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-12-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கருத்திட்டத்தின் I ஆம் கட்டத்தின் கீழ் இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்திற்காக இரண்டு (02) கப்பல்களைக் கொள்வனவு செய்தல்

- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப் பேச்சுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்திற்கு இரண்டு சரக்குக் கப்பல்களை கொள்வனவு செய்வதற்கும் இதற்காக கடன் வசதிகளை வழங்குவதற்கான நியதிகளை பூர்த்தி செய்யுமாறு வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அதிபதிக்கு பணிப்பு விடுப்பதற்காக துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், கப்பற்றுறை அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.