• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-12-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வலதுகுறைந்த மற்றும் முதியோர்களின் உற்பத்திகளுக்கான விற்பனை ஊக்குவிப்பு

- சமூக சேவைகள் அமைச்சர் மாண்புமிகு பீலிக்ஸ் பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைவாக சமூக சேவைகள் அமைச்சினூடாக பாரம்பரிய கைத்தொழில்கள், சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சினதும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினதும் தாவரவியல் பூங்கா, பொதுப் பொழுதுபோக்கு அமைச்சினதும் அரசாங்க மற்றும் தனியார் விற்பனை முகவராண்மைகள் உட்பட வேறு சகல தரப்பினர்களினதும் ஒத்துழைப்புடன் வலதுகுறைந்த மற்றும் முதியோர்களின் உற்பத்திகளுக்கான விற்பனை ஊக்குவிப்புக்கான ஒருங்கிணைந்த செயற்பாட்டுத் திட்டமொன்றைத் தயாரிப்பதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது