• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-12-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வலது குறைந்தோருக்கான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப் படுத்தல்

- வலதுகுறைந்தோர் தொடர்பிலான தேசிய கொள்கை சமூக சமத்துவத்தின் பேரில் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளை மேம்படுத்துவதோடு, பாதுகாக்கவும் செய்கின்றது. அதேபோன்று முழுமையான அத்துடன் திருப்திகரமான வாழ்க்கையொன்றை நடாத்திச் செல்வதற்கும் இலங்கையின் சமமான பிரசைகளாக அவர்களுடைய அறிவு, அனுபவம், ஆற்றல், விசேட நிபுணத்துவம் போன்றவை தேசிய அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யும் வாய்ப்பு இதன் மூலம் அவர்களுக்கு வழங்கப்படுகின்றது. பலப்படுத்தல், சுகாதாரம் மற்றும் புனரமைப்பு, கல்வி, வேலை மற்றும் வேலைவாய்ப்பு, பிரதான ஓட்டத்திற்குள் உள்வாங்குதல், இயலுமாக்கும் சூழல், தரவு மற்றும் ஆய்வு, சமூக ஒருங்கிணைப்பு என்னும் ஏழு (07) விடயப் பரப்புகளை நடைமுறைப்படுத்துவதற்காக தேசிய செயற்பாட்டுத் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளான வலது குறைந்தோர்களை பலப்படுத்துவதற்கும் சமூகத்தில் சமமான பயனுள்ள ஒருபகுதியினராக அவர்களை ஒன்றுதிரட்டுவதற்குமாக அரசாங்கத்தின் இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு 2014 - 2016 ஆம் ஆண்டிற்கான நடுத்தவணைக்கால வரவுசெலவுத் திட்ட கட்டமைப்பிற்குள் சுமார் 65 பில்லியன் ரூபா அரசாங்கத்தினால் குறித்தொதுக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள செயற்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உரியதான தொடர் நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு சமூக சேவைகள் அமைச்சர் மாண்புமிகு பீலிக்ஸ் பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.