• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-12-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்ளூராட்சி தேர்தல் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 262) கீழ் தொகுதி எல்லை நிர்ணயத்திற்கான தேசிய எல்லை நிர்ணயக் குழுவின் உத்தியோகபூர்வ காலப்பகுதியை இரண்டு (02) மாத காலத்திற்கு நீடித்தல்

- இந்த குழுவுக்கு குறித்தொதுக்கப்பட்டுள்ள பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு இந்தக் குழுவின் உத்தியோகபூர்வ கால எல்லையை 2013‑12‑07 ஆம் திகதி தொடக்கம் செயல்வலுவுக்கு வரத்தக்கதாக மேலும் மூன்று (03) மாத காலப் பகுதிக்கு நீடிப்பதற்காக உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் மாண்புமிகு ஏ.எல்.எம்.அதாவுல்லா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.