• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-12-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புதுக்கடையிலுள்ள காணித் துண்டொன்றை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு குறித்தொதுக்குதல்

- சட்டமா அதிபர் திணைக்களம் தாபிக்கப்பட்டுள்ள கட்டடத்தில் உள்ள இடவசதி தற்போதய தேவைகளை நிறைவு செய்வதற்கு போதுமானதாக இல்லாமையினால் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான கொழும்பு 12, புதுக்கடையிலுள்ள 80 பேர்ச்சஸ் வெற்றுக் காணித்துண்டை இந்த திணைக்களத்திற்கு குறித்தொதுக்குவதற்கு பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.