• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-11-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
செங்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) அங்கத்துவ நாடுகள், கண்காணிப்பாளர்கள் மற்றும் Dialog Partners ஆகியவற்றுக்கிடையில் சக்தி கழகமொன்றை தாபிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைக் கைச்சாத்திடுதல்

- செங்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பு என்னும் போது கசகஸ்தான் குடியரசு, மக்கள் சீனக் குடியரசு, கிரிகிஸ் குடியரசு, ரஷ்ய கூட்டாட்சி, தஜிகிஸ்தான் குடியரசு, உஸ்பெகிஸ்தான் குடியரசு என்பன 2011 யூன் மாதம் 15 ஆம் திகதி சீனாவின் செங்ஹாய் நகரத்தில் தாபித்துக் கொண்ட அரசாங்கங்களுக்கிடையிலான நிலையான சருவதேச அமைப்பொன்றாகும். இந்த அமைப்பின் முக்கிய பணியாவது அங்கத்துவ நாடுகளுக்குமிடையில் பரஸ்பர நம்பிக்கை, மிககிட்டிய அண்டை நாடாதல், நட்புறவை உறுதிப்படுத்தல், பொருளாதார, வர்த்தக, விஞ்ஞான, தொழினுட்ப, கலாசார, கல்வி, வலுசக்தி, போக்குவரத்து, சுற்றாடல் பாதுகாப்பு உட்பட ஏனைய துறைகளில் பயனுள்ள ஒத்துழைப்பினை அபிவிருத்தி செய்து கொள்வதும் ஆகும். வலுசக்தி மன்றத்தின் பணியாவது வலுசக்தி துறையின் திறமுறைகளைத் திட்டமிடல், கொள்கை மற்றும் முதலீடு பற்றிய கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளல் அத்துடன் வலுசக்தி தொழினுட்ப துறையின் ஒத்துழைப்புகளை அபிவிருத்தி செய்து கொள்ளல், இந்த துறைசார்ந்த நிபுணர்களை பயிற்றுவித்தல் என்பனவாகும். மேற்போந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சத்திடும் பொருட்டு மின்வலு, சக்தி அமைச்சர் மாண்புமிகு (திருமதி) பவித்திரா வன்னிஆரச்சி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது