• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-11-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கேகாலை மாவட்டத்தின் தெஹிஓவிட்ட பிரதேச செயலாளர் பிரிவின் பட்டங்கல பிரதேசத்தில் தாபிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக கல்லூரியின் நிருமாணிப்பு பணிகளை அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு கையளித்தல்
- வாழ்க்கைத்தொழில் தொழினுட்ப பல்கலைக்கழகத்தின் இணைக்கப்பட்டுள்ள 25 துணை பல்கலைக்கழக கல்லூரிகளைத் தாபிப்பதற்கு இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதுடன, குளியாபிட்டிய, கட்டுபெத்த, இரத்மலானை, மாத்தறை, யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரம் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கான கட்டடங்களை நிருமாணிப்பதற்கு ஏற்கனவே அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2014 "தயட்டகிருள" அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்கு ஒருங்கிணைவாக கேகாலை மாவட்டத்தில் தாபிப்பதற்குப் பிரேரிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக கல்லூரியை, தெஹியோவிட்ட பிரதேச செயலாளர் பிரிவில் பட்டங்கல பிரதேசத்தில் நிருமாணிக்கும் கருத்திட்டத்திற்கு உரிய பணிகளின் தொடர் நடவடிக்கைகளுக்காக இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு டலஸ் அழகப்பெரும அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது