• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-11-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை அரசாங்க மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபனத்தினால் (SPMC) உற்பத்தி செய்யப்படும் தனிவகைப்பட்டதல்லாத மருந்து வகைகளை மருத்துவ வழங்கல் பிரிவுக்கு (MSD) நேரடியாக வழங்குதல்
- அர்ப்பணிப்புடன் ஏற்றுக் கொள்ளக்கூடிய விலைகளின் மீது உயர் தரத்தில் தேவையான மருந்துவகைகளை உற்பத்தி செய்வதற்கு இலங்கை அரசாங்க மருந்தாக்கல் உற்பத்திக் கூட்டுத்தாபனம் தாபிக்கப்பட்டுள்ளது. கிடைக்கத்தக்க வளங்களை பயனுள்ளதாக பயன்படுத்திக் கொண்டு மருந்து உற்பத்தி தொழிலை மேம்படுத்தும் நோக்கில் பின்வரும் மருந்து வகைகளின் (04 வகைகள்) வருடாந்த தேவைப்பாட்டை போட்டிக் கேள்வி கோரல் நடைமுறையிலிருந்து விலகி முன்னர் ஒத்துக்கொள்ளப்பட்ட விலைகளின் மீது உடனடியாக செயல்வலுவுக்கு வரத்தக்கதாக இலங்கை அரசாங்க மருந்தாக்கல் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் மூலம் மருத்துவ வழங்கல் பிரிவுக்கு வழங்குவதற்காக சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது
* Amoxicillin Capsules BP 500mg
* Cloxacillin Capsules BP 500mg
* Gliclazide Tablets BP 80mg
* Spironolactone Tablets USP 25mg